இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
செட்டிநாடு ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும் ரயில்.
படத்தில் நிற்கும் இந்த ரெயில் வந்த இடம் செட்டிநாடு ரெயில் நிலையம். உங்களுக்குச் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். செட்டிநாடு என்ற ஊரே கிடையாது. ஆனால் அந்த ஸ்டேசனுக்கு மட்டுமே அந்த பெயர். அருகில் உள்ள பெரிய ஊர் கானாடுகாத்தான். இந்த ரெயில் நிலையம் காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் காட்டுக்குள் இருக்கும். ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் தண்டவாளத்தை ஒட்டி சிறிய பழமையான பங்களா ஒன்று உள்ளது.
அந்த காலத்தில் செட்டிநாடு ராஜா மதராசில் இருந்து கானாடுகாத்தானில் உள்ள தனது அரண்மனைக்கு வரும் போது ரெயிலில் வந்து செட்டிநாட்டு ஸ்டேசனில் இறங்குவார். முன்னதாக அவர் பயணம் செய்து வரும் பெட்டி இந்த குட்டி பங்களாவுக்கு நேரெதிரில் நிற்கும். ரெயிலை விட்டு இறங்கும் அவர் அந்த வீட்டுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வெளியில் நிற்கும் காரில் ஏறி அரண்மனைக்குச் செல்வாராம்.
ஆனால் இவருக்கு பிறகு வந்த இவரது வாரிசுகள் ரெயிலிலும் வருவதில்லை. பங்களாவை பயன்படுத்துவதுமில்லை. ஆட்களின்றி அடையாளம் மட்டுமே இன்று இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu