/* */

ஆளில்லா விமானங்களை தயாரித்து கொங்குநாடு இன்ஜி., கல்லூரி மாணவர்கள் சாதனை

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்கள் ஆளில்லா விமானங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆளில்லா விமானங்களை தயாரித்து கொங்குநாடு  இன்ஜி., கல்லூரி மாணவர்கள் சாதனை
X

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தயாரித்த, ஆளில்லா விமானங்களில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்சி மாவட்டம், தோளூர்ப்பட்டியில் உள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்கள் 100 பேர், 10 குழுவாக செயல்பட்டு, சென்னை ஸ்கைரைடர் ஏரோ சொல்யூசன் நிறுவனர் யுவராஜ் மற்றும் குழுவினர்களின் உதவியுடன், யுஏவி என்னும் ஆளில்லா விமானங்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.

கல்லூரி திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி கலந்துகொண்டு இந்த விமானவங்களின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார். இவ்விமானங்களைக் கொண்டு கல்லூரியில் நடைபெற்ற மெகத்தான் போட்டியில் பங்குபெறச் செய்து வானில் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.

இந்த ஆளில்லா விமானங்கள் விவசாயம், மருத்துவம், நில அளவீடு, வான்பாதுகாப்பு மற்றும் தீ போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அசோகன், டீன் அலுவலர் யோகப்பிரியா, மெக்கானிக்கல் துறை தலைவர் ஜெகதீஷ் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 12 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்