/* */

நாமக்கல்லில் 5.37 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: கலெக்டர் தகவல்

நாமக்கல்லில் நாளை முதல் 5.37 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 5.37 லட்சம் குடும்பங்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு: கலெக்டர் தகவல்
X

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு தரத்தினை ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல், 5 லட்சத்து 37 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேசன் கார்டுதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிறது. இதனை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 4ம் தேதி முதல் ரேசகன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இப்பரிசுப் பொருட்கள் தரமாக உள்ளதா, சரியான அளவில் உள்ளதா என்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் உள்பட 5 லட்சத்து 37 ஆயிரத்து 510 ரேசன் கார்டுதாதரர்கள் உள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், அனைவருக்கும் கரும்பு மற்றும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நாள்தோறும் 200 ரேசன்கார்டுதாரர்கள் வீதம் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அனுசரித்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று தெரிவித்தார்.

Updated On: 3 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!