/* */

நாமக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி 32ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 32ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி 32ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15,15,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 13,10,072 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 10,62,524 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 31 மெகா தடுப்பூசி முகாம்களில் 8,93,463 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். 32ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,76 சிறப்பு முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறுகிறது.

மொத்தம் 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசிகூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயனடையலாம்.

நாட்டின் 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு, ஜீலை 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியாக 3ம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, இரண்டாம் தவணை முடிந்து 6 மாதம் இடைவெளிக்குப் பின் 18-59 வயதுக்குட்பட்ட அனைவரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோஸாக 3ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயனடையலாம். கொரோனா நோய்த் தொற்று முற்றிலும் ஒழியவில்லை. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 July 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  2. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  3. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  4. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  7. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க