/* */

ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

Erode news- ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வியாழக்கிழமை (இன்று) ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

Erode news- மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Erode news, Erode news today- ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வியாழக்கிழமை (இன்று) ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி மேட்டுநாசுவம்பாளையம், காலிங்கராயன்பாளையம் பழையூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், 15-வது நிதிக் குழு மானியத்தின் கீழ் ரூ.36.46 லட்சம் மதிப்பீட்டிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டிலும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, அருந்ததியர் எல்லப்பாளையம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் எல்லப்பாளையம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு உயர்மட்ட பாலத்தினையும், அதேப்பகுதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சமுதாய நல கூடத்தினையும், ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர் எல்லப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, அய்யம்பாளையம் ராமகவுண்டன்வலசு சாலையில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் எல்லப்பாளையம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியினையும், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கழிப்பறை கட்டும் பணியினையும் என மொத்தம் ரூ.6.73 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனையடுத்து, ஈரோடு விற்பனை குழு சார்பில், ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டுமானப்பணி, உலர்களம், கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், அடிப்படை சுகாதார வசதிகளுடன் கூடிய கட்டுமானப்பணிகள், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 250 மெ.டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன கிடங்கு, ரூ.2 கோடி மதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட தேசிய மின்னணு பரிவர்த்தனை கிடங்கு, ரூ.10 கோடி மதிப்பீட்டில் மஞ்சளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய மஞ்சள் ஏற்றுமதி மையம் ஆகிய கட்டுமானப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுசீலா (வ.ஊ), சரஸ்வதி (கி.ஊ), உதவி பொறியாளர் பிரகாஷ், முதுநிலை செயலாளர் (ஈரோடு விற்பனைக் குழு) சாவித்திரி, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் உதவி நிர்வாகப் பொறியாளர் ஜெயந்தி மாலா, உதவிப் பொறியாளர்கள் பிரசன்னா, சந்திரஹரி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 16 May 2024 1:30 PM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...