/* */

ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை: 3,000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

விவசாய தோட்டத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம கும்பல் வெட்டி சாய்த்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை:  3,000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
X

ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையம் கிராமத்தில், விவசாய தோட்டத்தில் இருந்த சுமார் 3 ஆயிரம் வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

ஜேடர்பாளையம் அருகே போலீஸ் பாதுகாப்பை மீறி, விவசாய தோட்டத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம கும்பல் வெட்டி சாய்த்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் முன்பு, இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வெல்ல ஆலைகளில் தங்கியுள்ள, வெளிமாநில இளைஞர்கள் தங்கியிருக்கும் இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல், வீடுகளுக்கு தீவைப்பு, வெல்ல ஆலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்களுக்கு தீவைப்பு, ஆலை குடியிருப்பில் தங்கியிருந்த வெளிமாநிலத்தினர் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு ஆகிய சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

சமீபத்தில், ஜேடர்பாளையத்தை அடுத்த சின்ன மருதூரில் ஒரு பாக்குத் தோப்பில் இருந்த 3,000-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. கடந்த மாதம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள், 200 வாழை மரங்கள் ஆகியவை வெட்டி சாய்க்கப்பட்டன.

கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் தலைமையில், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆகியோர் இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேடர்பாளையம், கரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகல் 24 மணி நேரமும், தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோமணி என்ற சுப்பிரமணி (42) என்பவருக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தில் இருந்த 4,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டன.

தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி, பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜமுரளி, தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அசம்பாவித சம்பவம் தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து அங்கு கூடுதலாக, துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பை மீறி, தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்களால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 12 Nov 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...