/* */

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தினால் 3 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தும் நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.

HIGHLIGHTS

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தினால் 3 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமை தொழிலாளர்களாக நடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக அளவிலான புகார்கள் வந்துகொண்டுள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதில் இந்த மாதத்தில் மட்டும் 8 தொழிலாளர்கள் கொத்தடிமைத் தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். பெறப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த நிறுவன உரிமையாளர் மீது கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்திய தண்டணை சட்டத்தின் கீழ் பெரியோர்களை இப்பணிக்கு அழைத்து வரும் உரிமையாளருக்கு 7 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டணை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை இப்பணிக்கு அழைத்து வரும் உரிமையாளருக்கு வாழ்நாள் சிறை தண்டணையும் வழங்கவும் வழிவகை உள்ளது. எனவே தொழில் நடத்துபவர்கள், முன்பணம் கொடுத்து தொழிலாளர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக நடத்துவதை தவிர்த்து தண்டணையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!