/* */

நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல் 180 அரசு பஸ்கள் இயக்கம்- முழுவீச்சில் ஏற்பாடுகள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல் 180 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால், டெப்போவில் பஸ்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல்  180 அரசு பஸ்கள் இயக்கம்- முழுவீச்சில் ஏற்பாடுகள்
X

நாளை முதல்  அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால், நாமக்கல் போக்குவரத்து டெப்போவில் பஸ்களை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதம் கொரோனா தொற்று குறைந்து வருவதால், நாளை முதல், கூடுதல் தளர்வுகளுடன் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதன்படி ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடவும், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்துக்கு, மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நாளை 5ம் தேதி முதல், 180 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதற்காக பஸ்களை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில், அரசு போக்குரவத்து கழகத்திற்காக, நாமக்கல்லில் 2 பணிமனைகள், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தலா ஒரு பணிமனை என மொத்தம் 4 பணிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் 264 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது அரசு 66 சதவீத பஸ்களை நாளை முதல் இயக்க அனுமதி அளித்து உள்ளது. எனவே நாளை முதல் 180 அரசு பஸ்களை இயக்கப்பட உள்ளது. இதற்காக பஸ்களை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படும். இதற்காக ஒவ்வொரு சீட்டின் பின்பகுதியிலும் ரைட் குறியீடு வரையப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 July 2021 3:31 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?