/* */

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மினி மராத்தான்

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மினி மராத்தான்
X

நாமக்கல்லில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி மினி மராத்தான் பாேட்டிகள் நடைபெற்றது.

நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைகல்லூரியில் தொடங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட தேர்தல்அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு ஒட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.

போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியை சேர்ந்த அரவிந்த் என்ற மாணவரும், பெண்கள் பிரிவில் செல்வம் கல்லூரியை சேர்ந்த கிருத்திகா என்ற மாணவியும் முதலிடம் பிடித்தனர்.

Updated On: 7 March 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்