/* */

காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம் தேர்ச்சி..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6655 மாணவர்களும், 7164 மாணவிகள் என மொத்தம் 13,819 பேர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம் தேர்ச்சி..!
X

அரசு பொது தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் செல்பேசிகளில் பார்க்கும் மாணவிகள் ( கோப்பு படம்)

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டு மேல்நிலை மட்டும் பத்தாம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை பல்வேறு கட்டங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவர்களின் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் தமிழக முழுவதும் காலை 9:30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் பொது தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்கள் அளித்த கைபேசியில் அவர்களது குறுஞ்செய்திகளாக அவர்களது மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8013 மாணவர்களும், 7772 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 785 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இவர்களில் 6,655 மாணவர்களும், 7,164 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 819 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

அவ்வகையில் மாணவர்கள் 83.05% மாணவிகள் 92.18 சதவீதம் என ஒட்டுமொத்த சராசரியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முப்பத்தில் இரண்டாவது இடத்தை இந்த ஆண்டு பிடித்துள்ளது .கடந்த ஆண்டு 25 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை 29 பள்ளிகள் பெற்றுள்ளது கடந்த ஆண்டு 42 பள்ளிகள் 100% எட்டியதும் குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 183 உயர்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில் அதில் 92 அரசு பள்ளிகளும் 64 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி என உள்ளது . கடந்த ஆண்டு 8 அரசு பள்ளிகள் 100% எட்டிய நிலையில் தற்போது இரண்டு பள்ளிகள் மட்டுமே 100% எட்டி உள்ளது.

Updated On: 10 May 2024 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு