/* */

நாமக்கல்லில் கமல்ஹாசன் பிரச்சாரம்

நாமக்கல்லில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "எங்கு பார்த்தாலும் ஆசீர்வதிக்கும் கரங்களும், வெற்றி நிச்சயம் என்று சமிக்ஞைகள் சொல்லும் கரங்களும் எனக்கு தெரிந்து கொண்டிருக்கிறது.

தாய்மார்கள், குழந்தைகள் எல்லோரும் எனக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்கள். நானும் உங்களை நம்ப தயாராகி விட்டேன். தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது. அதற்கான எல்லா சான்றுகளும் இங்கு தெரிகிறது. மக்கள் நீதி மய்யத்தில் மாலைகள் கிடையாது, பொன்னாடைகள் கிடையாது. காலில் விழும் பழக்கமும் கிடையாது.

ஊழல் ஊழல் என, நாம் யார் மீதும் பழிபோட்டுக் கொண்டு இருக்காமல், வழிகாட்டும் அரசியலை உருவாக்குவோம். அதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கு நீங்களும் தயாராகி விட்டீர்கள் என்பதற்கான எல்லா சாயலையும் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

இங்கு போன முறை சொன்னதுபோல், பெருமைகள் கொண்ட ஊர் இது. நாமக்கல் கவிஞரின் ஊர். பல பெரியவர்கள் வாழ்ந்த ஊர். குறிப்பாக, என்பால் அன்பு வைத்திருக்கும் நீங்கள் எல்லோரும் வாழும் ஊர் மீண்டும் வருகிறேன். மீண்டும் அதே வாக்குறுதியுடன் செல்கிறேன். இத்தனை பலமும் எனக்கு இருந்தால், என் கையை பலப்படுத்தினால் நாளை நமதே, நிச்சயம் நமதே" என பேசினார்.

Updated On: 4 Jan 2021 5:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...