/* */

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் யூனியன் சங்க துவக்கவிழா

குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூனியன் மற்றும் கூட்டணி சங்கங்களின் துவக்கவிழா நடந்தது.

HIGHLIGHTS

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் யூனியன் சங்க துவக்கவிழா
X

தலைமையுரை ஆற்றிய கல்லூரி தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 48வது கல்லூரி யூனியன் மற்றும் அதன் கூட்டணி சங்கங்களின் துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

விழாவில் வாழ்த்துரை வழங்கும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா.

கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூராஜா அரங்கில் நடந்த இந்த விழாவை கல்லூரிகளின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவியும் மாணவர் பேரவைத் தலைவருமான நிலா விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்றார்.

தலைமையுரை ஆற்றிய கல்லூரிகளின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை, 'மாணவப்பருவத்தில் மாணவர்கள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும். வளரும் வயதில் அவர்களின் தலைமைப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வழிகாட்டிகளாக மாறுவார்கள்.' என்று பேசினார்.பின்னர் கல்லூரிகளின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை முன்னிலையில் மாணவர் பேரவைச் செயலர் மற்றும் துணைத் தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மாணவ பிரதிநிதி ஒருவருக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் கல்லூரியின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும்போது, 'மாணவர்கள், வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே கற்பதால் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியாது. தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும். தனித்திறன் பெற்றவர்களே தனித்த அடையாளம் பெறுவார்கள். அவர்களே சாதனை புரிபவர்களாக விளங்குவார்கள். அவர்களே இந்த சமுதாயத்திற்கு ஒரு சிறந்த பங்களிப்பை வழங்கமுடியும். மாணவர்கள் தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்வதோடு தொழில் நுட்பவளர்ச்சிக்கு ஏற்ப தங்கள் அறிவினை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.' என்று வாழ்த்தினார்.

விழா முடிவில், மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி அருளரசி நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். சீரங்கநாயகி(பேரவையின் இணைத்தலைவர்), கணினித்துறை இணை பேராசிரியர் கீதா மற்றும் துறைத் தலைவர்கள், பேரவைச் செயலர்கள் கலந்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Updated On: 24 Nov 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...