/* */

கிருஷ்ணகிரி: ரூ. 1.07 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல்

கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.07 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை, லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: ரூ. 1.07 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல்
X

கிருஷ்ணகிரி அருகே, ரூ. 1.07 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. 

கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வையொட்டி மதுக்கடைகள், காலையில் குறிப்பிட்ட நேரம் திறந்து விற்பனை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, சரக்கு வாகனங்களில் கர்நாடகாக மாநில மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, சிலர் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ குமார் தலைமையில் எஸ்எஸ்ஐக்கள் அறிவழகன், முனுசாமி, கண்ணன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகில், வாகனத்தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 38 பெட்டி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,392 குவாட்டர் மது பாட்டில்களும், 432 பிளாஸ்டிக் குவார்ட்டர் மது பாட்டில்களும் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஆகும்.
மது பாட்டில்களையும், கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மஞ்சப்புத்தூரை சேர்ந்த கருணாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 30 May 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!