/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல்
X

கரூர் மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டு தனித்தனி அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.கரூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் உடனிருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட அறையில், வைக்கப்பட்ட பிறகு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் பூட்டி சீல் வைத்தார்.

அதை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட அறை வாசல் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.அதுமட்டுமில்லாமல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 7 April 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  4. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  5. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  7. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  8. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  9. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்