/* */

ஏடிஎம் மிஷின் முறையாக பராமரிக்கப்படாததால் அச்சத்தை ஏற்படுத்தும் அலாரம்

கரூரில் ஏ டி எம் மிஷின் முறையாக பராமரிக்கப்படாததால் நினைத்த நேரங்களில் அலாரம் அடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஏடிஎம் மிஷின் முறையாக பராமரிக்கப்படாததால் அச்சத்தை ஏற்படுத்தும் அலாரம்
X

கரூரில் திடீர், திடீரென அலாரம் அடிக்கும் ஏடிஎம் மையம்.

கரூர் - திண்டுக்கல் சாலையில் தாந்தோன்றிமலை மில்கேட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், அதன் அருகில் அந்த வங்கியின் ஏ டி எம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இன்று இரவு சுமார் 8 மணியளவில் தானாக அலாரம் அடிக்க துவங்கியது.

இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்சியடைந்து அந்த மையத்தை பார்த்த போது அதில் யாரும் இல்லை. ஆனால், அலாரச் சத்தம் நிற்காமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக அடித்துள்ளது.

இதனையடுத்து அருகில் உள்ள வங்கியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த வங்கி ஊழியர்கள் அலாரத்தை நிறுத்தி விட்டு சென்றனர்.

தொடர்ந்து இந்த ஏ டி எம் மிஷினில் இருந்து இரவு, பகல் பாராமல் அடிக்கடி தொடர்ந்து அலாரம் அடிப்பதால் அருகில் வசிப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 24 Jan 2022 7:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது