/* */

கரூரில் ஊரடங்கு: கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன

கரூரில் ஊரடங்கு: கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன
X

கரூரில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவு விடுதிகள், மருந்தகங்கள் திறந்திருந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கரூர் நகரம் வேலாயுதம்பாளையம், குளித்தலை, பரமத்தி, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த இடங்களில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மட்டும் திறந்திருந்தன. அத்தியாவசிய பணி செய்வோர் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நகரின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. கரூரிலுள்ள வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இயங்கின. இங்கு வேலைக்கு வந்தவர் தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் நிறுவனத்தின் வாகனங்களில் வேலைக்கு வந்தனர்.

Updated On: 10 May 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை