/* */

சாலையில் பசி மயக்கத்தில் விழுந்த வாலிபர் : உணவளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சாலையில் பசி மயக்கத்தில் விழுந்த வாலிபரை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீட்டு உணவளித்தார்.

HIGHLIGHTS

சாலையில் பசி மயக்கத்தில் விழுந்த  வாலிபர் :  உணவளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்
X

சாலையில் மயங்கி விழுந்த இளைஞரை அமைச்சர் அன்பரசன் மீட்டு உணவளித்தார்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளை இன்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் , கீழம்பி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை செல்ல கீழம்பி வழியாக அரக்கோணம் சாலையில் சென்றபோது திம்மசமுத்திரம் பகுதியில் அமைச்சரின் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே சாலையில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார் .

இதைக் கண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடனடியாக காரில் இருந்து இறங்கி அவனை மீட்டு தண்ணீர் குடிக்க வைத்து மெல்ல விசாரித்தபோது கடந்த இரு தினங்களாக உணவு அருந்தவில்லை என்பதால் மயங்கிிக் கீழே விழுந்ததா தெரியவந்தது.

உடனடியாக அவரது உதவியாளரை அழைத்து வாகனத்தில் இருந்த பிஸ்கட் மற்றும் குடிநீர் அளித்தும் அப்பகுதிகளில் உள்ள திமுக பிரமுகரை அழைத்து உடனடியாக அவருக்கு உணவு அளித்து உரிய இடத்தில் அவரை சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.

மயங்கி விழுந்தவரை உடனடியாக அமைச்சர் என்றும் பாராமல் அவரின் நலன் கருதி வாலிபருக்கு உதவிய நிகழ்வைப் பார்த்த அப்பகுதி மக்கள் அமைச்சரின் மனித நேய செயலைப் பாராட்டினர்.

Updated On: 26 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...