/* */

பெண் அலுவலர்கள் அதிமாக பணிபுரிவதால் ஆய்வு கூட்ட நேரத்தை மாற்ற வேண்டும்

பெண் அலுவலர்கள் அதிகம் பணிபுரிவதால் வராந்திர ஆய்வு கூட்டத்தை மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பெண் அலுவலர்கள் அதிமாக பணிபுரிவதால் ஆய்வு கூட்ட நேரத்தை மாற்ற வேண்டும்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் காஞ்சி மாவட்ட சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு மாநிலத் துணைத் தலைவர் வே. பாலாஜி மற்றும் மாவட்ட தலைவர் பா.முருகானந்தம் தலைமையில் அளிக்கப்பட்டது.

இதில் , உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் பணியாளர்களின் நலன் மற்றும் குடும்ப சூழ்நிலை கருதி அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் பணிமாறுதல் செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் வாரம் தோறும் மாலை 6 மணிக்கு மேல் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட ஊராட்சி அலகில் பெண் அலுவலர்கள் / பணியாளர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் குடும்ப நலன் / சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூட்டத்தினை மாதம் ஒரு முறையும் மாலை 6 மணிக்குள் கூட்டம் நிறைவு பெறும் வகையில் முடித்திடும் வகையில் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்ளுதல்,

மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த அலுவலர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கியமைக்கும் , அவர்கள் குடும்ப வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியதற்கும் சங்கம் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுதல் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கை அடங்கிய மனுவை அளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  7. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  8. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  9. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்