/* */

டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் கீழ் 110 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் புதியதாக அரசு மதுபானக்கடை அமைய உள்ளதக தெரியவந்துள்ளது.

இதை அறிந்த அக்கிராம மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தியிடம் புதியதாக திறக்கப்பட உள்ள அரசு மதுபானக் கடையை தடை செய்யக்கோரி பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் , புதியதாக அமைய உள்ள மதுபான கடைகளால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் , இதுமட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து இங்கு மது வாங்க வருபவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை நிலவும் எனவும் மதுவினால் தங்களின் குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கி விடும் . எனவே இம்மனுவினை மாவட்ட ஆட்சியர் கனிவுடன் பரிசீலித்து புதிய கடைக்கு தடை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Updated On: 5 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்