/* */

ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகார பறிப்பை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு

ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகார பறிப்பை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகார பறிப்பை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு
X

ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு மீண்டும் அதிகாரங்கள் வழங்க கோரி ஆக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 274 ஊராட்சி கிராமங்கள் செயல்பட்டு வருகிறது. அவர்களின் பணிகளையும் மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் மாவட்ட ஊராட்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் ஊராட்சி மன்ற சட்ட விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்படுத்தியது தொடர்பாக அவரது ஊராட்சி மன்ற அதிகாரங்கள், நிதி பரிவர்த்தனை ஆகியவற்றை உடனடியாக நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக தமிழ் அமுதன் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை செயல்படுத்தி வந்த நிலையில், உள்ளாட்சி சட்ட விதிகளை மீறி நிதி மேலாண்மையை தவறாக கையாண்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இது காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊராட்சி மன்ற கிராம மக்களுக்கு தேவையான அன்றாட நடவடிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர் கவனிக்க முடியாத காரணத்தால் கிராம மக்கள் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரப் பறிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் வழங்கினார்கள்.

கிராம மக்களின் மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உறுதி அளித்ததின் பேரில் ஆதனூர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.

காலை 10 மணி அளவில் குவிந்த பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் காவல்துறையின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பத்து நபர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் குறையை தெரிவிக்க ஒப்புதல் தெரிவித்ததால் கிராம பொதுமக்கள் அதிருப்தி அடைந்து அதன் பின் அவர்களிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் முக்கிய நபர்கள் மட்டும் சந்தித்து குறைகள் தெரிவிக்க கூறியதால் மற்றவர்கள் மன வருத்தத்துடன் காணப்பட்டனர்.

Updated On: 5 Dec 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?