ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு

Erode news- நாக் அமைப்பால் ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கிய போது எடுத்த படம்.
Erode news, Erode news today- ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு நாக் அமைப்பால் ஏ+ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தின் சார்பாக கடந்த மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கல்லூரியின் பல்வேறு வகையான செயல்பாடுகள் மாணவர்களின் சேர்க்கை விபரம், தேர்ச்சி விபரம், ஆசிரியர்களின் தகுதி மற்றும் அவர்களின் செயல்பாடுகள், கல்லூரி கட்டமைப்பு வசதிகள் போன்ற பல்வேறு விவரங்கள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு நாக் அமைப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை ஆய்வு செய்து ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் தரத்தினை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாக் அமைப்பின் ஆய்வில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 புள்ளிகளுக்கு 3.48 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆய்வில் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றலுக்கான அடிப்படை வசதிகள், நிர்வாகம், நிறுவன மதிப்பு, பாடத்திட்டம் ஆகியவை சிறப்பாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாக் அமைப்பால் கல்லூரி ஏ-பிளஸ் தரத்தை அடைந்தது மிகவும் சிறப்பானதாகும். இதற்காக ஆசிரியர்களையும் உள்மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொறுப்பாளர்களையும், ஆசிரியரல்லாத பணியாளர்களையும், மாணவ- மாணவியர்களையும், பெற்றோர்களையும், முன்னாள் மாணவர்களையும் கல்லூரி செயலர் பாலுசாமி, நிறுவனத் தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் விஜயகுமார், கல்லூரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன், இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu