திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
நீட் தேர்வு எழுதுவதற்காக வரிசையில் நின்ற மாணவிகள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள் என 600 பேர் தேர்வு எழுதினர்.
அதேபோல் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ ஆர். எம். ஜெயின் வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளியில் 359 மாணவிகளும் 169 மாணவர்களும் என 528 பேர் தேர்வு எழுதினர்.
கொரட்டூரில் உள்ள டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியில் 353 மாணவிகளும் 151 மாணவர்களும் என 504 பேர் தேர்வு எழுதினர்.
அதேபோல் செங்குன்றத்தில் உள்ள குட் வேர்ட் பப்ளிக் பள்ளியில் 319 மாணவிகளும் 185 மாணவர்களும் என மொத்தம் 504 பேர் தேர்வு எழுதினர். அம்பத்தூரில் உள்ள ஜி.கே. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 366 மாணவிகளும் 138 மாணவர்களும் என 504 பேர் தேர்வு எழுதினர்.
பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பத்தில் உள்ள த பியூப்பிள் சவீதா எகோ பள்ளியில் 357 மாணவிகளும் 147 மாணவர்களும் என 504 பேர் தேர்வு எழுதினர்.அதேபோல் திருத்தணியில் உள்ள சக்தி பப்ளிக் பள்ளியில் 86 மாணவிகளும் 37 மாணவிகளும் என 123 பேர் இந்த நீட் தேர்வு எழுதினர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தத்தில் 2287 மாணவிகளும் 980 மாணவர்களும் என மொத்தம் 3267 மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு நீட் மருத்துவ தேர்வு எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu