/* */

காஞ்சியில் புதிய 10ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க்

காஞ்சி அரசு மருத்துவமனையில் புதிய 10ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

HIGHLIGHTS

காஞ்சியில் புதிய 10ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க்
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன்

தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ. அன்பரசன் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

அதன்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் டேங்க் நிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.

நோயாளிகள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே உள்ள 6000 கிலோ லிட்டர் ஆக்சிஜன் டேங்க் தவிர, கூடுதலாக 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் டேங்க் புதியதாக இம்மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுவதால் காஞ்சிபுரம் மாவட்ட நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை இங்கு கிடைக்கும் என தெரிவித்தார்

Updated On: 8 May 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு