/* */

காரில் கொடியுடன் வலம் வந்த நபர்களை எச்சரித்த பறக்கும் படை குழு

காரில் கட்சி சின்னம் கொடியுடன் வலம் வந்தவர்களை தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்குமாறு பறக்கும் படையினர் எச்சரித்து அனுப்பினர்

HIGHLIGHTS

காரில் கொடியுடன் வலம் வந்த நபர்களை எச்சரித்த பறக்கும் படை குழு
X

காரில் இருந்த கட்சி கொடியை அகற்றும்  தேர்தல் அதிகாரிகள் 

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்தது.

மேலும் அந்தந்த பகுதிகளில் இருந்த கட்சிக் கொடிக் கம்பங்களில் கொடிகள், தலைவர்கள் சிலை துணிகளை கொண்டு மூடுதல், சுவர் விளம்பரங்களை அழித்தல், கல்வெட்டுகளை மூடுதல், கட்சி கொடிகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை கண்காணிக்க அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் இருபத்தி நான்கு மணி நேரமும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அப்போது பல இடங்களில் காரில் கட்சி கொடிகளை அணிவித்தபடி வலம் வந்த நபர்களுக்கு அதை அகற்றும் படியும் , தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை நன்னடத்தை விதிகளை கடைபிடிக்குமாறு இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 1 Feb 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது