/* */

கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு

காஞ்சிபுரத்தில் கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்களை எரிப்பதால் இந்த பகுதியில் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

HIGHLIGHTS

கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு
X
காஞ்சிபுரம் குடியிருப்பு பகுதியில் கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் தாமல்வார் தெரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பின்புறம் பரந்த வெளியில் பழுதான நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களிலிருந்து உதிரி பாகங்கள் பிரித்தெடுக்கும் பணியை தனிநபர் ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.இந்தப் பணியில் குறைந்தபட்சம் பத்து நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் உதிரி பாகங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எலெக்ட்ரிகல் ஓயர்களை ஒரு கும்பலாக சேர்த்தபின் அவை எரியூட்டப்படுகிறது.

இதனால் இதன் அருகே உள்ள குடியிருப்புகள் முழுவதும் பெரும் புகை மூட்டமும் சூழ்ந்து அதனால் மூச்சுத் திணறலும் அப்பகுதியில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் உதிரி பாகங்கள் பிரிக்கும் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டர்களை சட்டவிரோதமாக வைத்துக்கொண்டு எரியூட்டும் பகுதி அருகேயே பணிகளை மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சிறிதேனும் கவனக்குறைவு ஏற்படும் நிலையில் இப்பகுதியில் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறலால் அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்படுவதாகும் இதுகுறித்து தெரிவித்தும் முறையற்ற செயலை தொடர்ந்து நபர்கள் செய்து வருவதால் காவல்துறை உடனடியாக சட்டவிரோதமாக சிலிண்டர் பயன்படுத்துவதை பறிமுதல் செய்தும்,

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து பாதுகாப்பான முறையில் பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 10 Dec 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...