/* */

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில், ஆக்கிரமிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் அவதி
X

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாலை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அரசு மருத்துவமனைக்கு வெளியே, நோயாளிகள் வரும் இரு சக்கர வாகனங்கள், அங்குள்ள ஆம்புலன்ஸ், கடைகள் போன்ற இடங்களில் நிறுத்துகின்றனர். வாகங்களின் இத்தகைய ஆக்கிரமிப்பால், சாலையின் பாதி இடம் ஆக்கிரமித்து சாலை குறுகலாகிவிடுகிறது. இதனால், சாலையில் செல்லும் பிற வாகனங்கள், பேருந்துகள் செல்ல இயலாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, இங்கு உள்ள தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் , கடைகள் என அனைத்தையும் அங்கிருந்து அகற்றி, அரசு மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்த, காஞ்சிபுரம் மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 6 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...