/* */

ஸ்டாலின் பிறந்தநாள் : காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் கொண்டாட்டம்.

தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான ஸ்டாலின் 69வது பிறந்த நாளை காஞ்சிபுரத்தில் திமுகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்

HIGHLIGHTS

ஸ்டாலின் பிறந்தநாள் : காஞ்சிபுரத்தில் திமுக  சார்பில் கொண்டாட்டம்.
X

திமுக தலைவர் பிறந்தநாளை மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடிய திமுகவினர்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69 பிறந்தநாள் விழா தமிழெங்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் நல திட்ட உதவிகள், கழக கொடியேற்றுதல், அன்னதானம் வழங்கல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் நகர, பேரூர், ஒன்றியங்களில் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 18வார்டு பகுதியில் திமுக கழக கொடியினை மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்றினார் .

மேலும் 69 கிலோ எடை கொண்ட திமுக தலைவர் வரையப்பட்ட கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கினர். தூய்மை பணியாளர்களுக்கு லட்டு, காலை உணவுகள் வழங்கியும், அப்பகுதி வழியாக வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை‌ஓருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்அரவிந்த்குமார் , வட்ட பிரதிநிதி சம்பத், வட்ட கழக நிர்வாகிகள் கீதா, விஜியா, ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 1 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்