/* */

வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் மீண்டும் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது 57 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது நிரம்பி வழிகிறது.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் மீண்டும் நிரம்பி வழியும் தடுப்பணைகள்
X

மாகறல் தடுப்பணை நிரம்பி உபரி நீர் நீர்வீழ்ச்சி போல் கொட்டும் காட்சி

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டல நிலையம் அறிவித்தது. இதனால் பல மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை தொடர்ந்து நீடித்து வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு அனைவரும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 96 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் ஐம்பத்தி ஏழு ஏரிகள் முழுமையாகவும் , செங்கல்பட்டில் உள்ள 528 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 93 ஏரிகளில் 18 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதேபோல் 148 ஏரிகள் 70 சதவீதமும் , 142 ஏரிகள் 50 முதல் 70 சதவீதமும் , 286 ஏரிகள் 25 லிருந்து 50 சதவீதமும் நீர் தற்போது இருப்பில் உள்ளது.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளான மாகறல், திருமுக்கூடல் ஆகியவற்றில் காலை முதல் மீண்டும் நீர் வரத்து அதிகரிதத்தால், உபரி நீர் நீர்வீழ்ச்சி போல் வெளியேறி வருகிறது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் வாயலூர் , ஈசூர்வள்ளிபுரம் தடுப்பணைகள் நிரம்பி உபரி நீர் மாமல்லபுரம் கடலுக்குச் செல்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வருங்காலத்தில மீதமுள்ள தடுப்பணைகள் கட்டினால் கடலில் செல்லும் நீர் சேமிக்கப்பட்டு நீர் ஆதாரம் பெருகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 26 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!