/* */

ஈரோட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Demonstration by village administrative officers in Erode to emphasize various demands

HIGHLIGHTS

ஈரோட்டில்  கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஈரோடு வட்டக்கிளை தலைவா் சம்பத்குமார் தலைமை வகித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும். பயணப்படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும். நகர நில வரி திட்ட கணக்குகளை முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டும். வருவாய் துறை பணிகளை தவிர பிற பணிகள் திணிப்பை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது . இந்த கிராமங்களின் வளர்ச்சி என்பது இன்றைக்கு தானே நிகழ்ந்து விட முடியாது . எனவே ஒரு கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற , அங்கே ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்பு தேவையாக இருக்கிறது . கிராம அளவில் ஒரு சிறந்த நிர்வாகம் அமைகின்ற போது அதன் காரணமாக கிராமங்களின் வளர்ச்சியிலும் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் . எனவே இந்த வளர்ச்சியில் குறிப்பட்டுச் சொல்லும்படியாக இந்த கிராமங்களில் பணிபுரியக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்களின் சிறப்பான செயல்பாடும் அவசியமாகிறது. ஆனால், பணிச்சுமையால் தவித்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போதிய ஊதியம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பில் பெருங்குறை நீடித்து வருவது வேதனைக்குரியது என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 31 March 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!