/* */

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர்கள் கோரிக்கை

மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

HIGHLIGHTS

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர்கள் கோரிக்கை
X

ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் 30 -ஆவது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது 

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்யக்கோரி கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் 30 -ஆவது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கௌரவத தலைவர் பழனியப்பா நாராயணசாமி, செயலாளர் பாலு என்ற தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் சிவ சண்முகம், சாந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சொத்து வரி உயர்வு, சொந்த கட்டிடங்களுக்கு 10 சதவீதமும், வாடகை கட்டிடங்களுக்கு 20 சதவீதமும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார கட்டண உயர்வினை ரத்து செய்து, சிறு, குறு தொழில்கள் பாதிப்புக்குள்ளாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மேட்டூர் சாலையில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ள தடுப்பு சுவரினை அகற்றி, போக்குவரத்து நெரிசலை குறைத்திட வேண்டும்.

மீனாட்சி சுந்தரம் சாலையில் ஆக்கிரமிப்பில் உள்ள 80 அடி சாலையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சின்னச்சாமி நிதிநிலை அறிக்கையினை சமர்பித்தார். இணை செயலாளர் முகமது ரபீக், 36வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Updated On: 29 Nov 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்