/* */

பண்ணாரி அம்மன் கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு...

சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

HIGHLIGHTS

பண்ணாரி அம்மன் கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு...
X

சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் தொட்டம்பாளையம் புன்செய் புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மேலும், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கிடையே ஈரோடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் அதிமுகவினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி மற்றும் அதிமுகவினர் பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பண்ணாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது என்றும் அதிமுகவில் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என தங்கத் தேர் இழுக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவினர் தெரிவித்தனர்.

Updated On: 19 Jan 2023 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...