/* */

பலத்த மழை: மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரை,திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்

HIGHLIGHTS

பலத்த மழை: மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
X

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.

பலத்த மழை காரணமாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை:

மதுரை,திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 09 /11/2023 வியாழக்கிழமை பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வகையான பள்ளிகளுக்கும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது என, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அறிவித்துள்ளார். இதே போல மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணிடம் 21,65,500 பணத்தை ஏமாற்றி மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு:

திண்டுக்கல் நாகல் நகர் பகுதியை சேர்ந்த அம்சவல்லி (38). இவர், ஞானாம்பிகை டோர்ஸ் என்ற பெயரில் ரெடிமேட் டோர் சப்பளை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம், முருகன் என்பவர் குறைந்த விலையில் பிவிசி டோர் மற்றும் ரெடிமேட் மர டோர் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ரூ21,65,500 பெற்றுக் கொண்டு மோசடி செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பாஸ்கரன் , அம்சவல்லி புகார் அளித்ததை தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 9 Nov 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்