/* */

கோவை டூ கோவா - அக். 30 முதல் தினமும் நேரடி விமான சேவை

Coimbatore To Goa Flight Lowest Price -கோவையில் இருந்து கோவாவிற்கு, தினமும் நேரடியாக, அக்டோபர் 30ம் தேதி முதல், விமான சேவை துவங்குகிறது.

HIGHLIGHTS

கோவை டூ கோவா -  அக். 30 முதல் தினமும் நேரடி விமான சேவை
X

Coimbatore To Goa Flight Lowest Price -கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற கோவாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கோவையில் இருந்தும் கோவாவிற்கு செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கோவையிலிருந்து கோவாவிற்கு ஏற்கனவே ரயில் சேவை வசதி உள்ளது.

ரயில் பயண சேவை கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளும் நிலையில், விமான சேவை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதையடுத்து 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' கோவையில் இருந்து நேரடியாக கோவாவிற்கு விமான சேவையை, வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 186 இருக்கை வசதிகளுடன் விமான சேவை தொடங்க உள்ளது.

தினமும் இரவு 11.05 மணிக்கு புறப்படும் விமானம், அன்றைய தினமே நள்ளிரவு 12.30 க்கு கோவாவை சென்றடையும். அதேபோல் நள்ளிரவு 1 மணிக்கு கோவாவிலிருந்து புறப்படும் விமானம் 2.20 க்கு கோவையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து கோவாவிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கொண்டாட்டங்களை அதிகம் விரும்புவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 March 2024 10:23 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்