/* */

செஸ் ஒலிம்பியாட் :கோவை மாநகரில் செஸ் போர்டு நிறத்தில் மாறிய பேருந்து நிறுத்தம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதையொட்டி கோவை மாநகரப்பகுதிகளில் செஸ்போர்டு நிறத்துக்கு பேருந்து நிறுத்தங்கள் மாறின

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட் :கோவை மாநகரில் செஸ் போர்டு நிறத்தில் மாறிய  பேருந்து நிறுத்தம்
X

கோவை மாநகரில் செஸ் ஒலிம்பியாட்  போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  செஸ் போர்டு நிறத்தில் மாற்றப்பட்டுள்ள மாநகர பேருந்து நிறுத்தம் முன்னே  செல்பி எடுத்து கொண்ட மாணவி

செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவை மாநகர பகுதிகளில் செஸ் போர்டு வண்ணத்தில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட்டன.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் செஸ் போர்டை போன்று மின் விளக்குகளால் வண்ண மயமாக்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் இந்த பேருந்து நிறத்தங்கள் பொதுமக்களை கவரும் விதமாக அமைந்துள்ளதால் அங்கு வரும் பொதுமக்கள் இதனை பார்த்து புகைப்படங்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர்.முதல்கட்டமாக லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் வண்ணமயமாக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்கள் வண்ணமயமாக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Updated On: 20 July 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?