/* */

தொடர்மழையால் முக்கிய வீதிகளில் தேங்கிய மழைநீர்

திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர்மழையால் முக்கிய வீதிகளில் நீர் தேங்கியுள்ளது.

HIGHLIGHTS

தொடர்மழையால் முக்கிய வீதிகளில் தேங்கிய மழைநீர்
X

திருவண்ணாமலை தேரடி வீதியில் தேங்கியுள்ள மழைநீர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பல இடங்களில் மின் கசிவு மற்றும் மின்சாரம் தாக்கி பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

மழை விட்டுவிட்டு பெய்தாலும் அதிக அளவில் பெய்தது. அதன் காரணமாக திருவண்ணாமலை முக்கிய வீதியான தேரடி வீதியில் பல இடங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாக மக்கள் நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், இது போன்ற சமயங்களில் தண்ணீர் தேங்குவது அதன் காரணமாக கொசுக்கள் உருவாவதும் டெங்கு காய்ச்சலை அதிகம் வருவதற்கு காரணமாகி விடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Updated On: 11 Oct 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்