/* */

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி

திருவண்ணாமலையில், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி
X

கோப்பு படம் 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கார்த்திகை தீப திருவிழாவின் போது 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்ரா பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். இவ்வாறு வெகுசிறப்பாக நடைபெறும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் வருகிறது. இதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கிரிவலத்தின் போது தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும்.

மேலும் பாஸ்போர்ட் அளவுள்ள 3 புகைப்படங்கள், முகவரிக்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதியை தவிர்த்து 14-ந் தேதி வரை நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்க இலையால் ஆன தென்னை மற்றும் பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்