/* */

திருவண்ணாமலை தீபத் திருவிழா.. 63 நாயன்மார்கள் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தீபத் திருவிழா.. 63 நாயன்மார்கள் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு...
X

63 நாயன்மார்கள் வீதி உலாவில் பங்கேற்றோர்.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழாவில், உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும், அதனையடுத்துச் சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறும்.

சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார் என்பதாலேயே, தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை செய்வது உண்டு.

திருவிழாவின் பத்தாம் நாளான அதிகாலை 4 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். அந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும், ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படும். பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைப்பார்கள். அதன்பிறகு, கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பார்ப்பது வழக்கம்.

அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடப்பு ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

6 ஆவது நாளான இன்று விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம், வெள்ளி யானை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களும் மாட வீதியில் பவனி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 2 Dec 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  4. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  7. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  8. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...