உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக வாழத்தெரியாது.
நம் தினசரி வாழ்க்கையில், நாம் பெரும்பாலும் சிக்கலான சூழ்நிலைகள் மற்றும் உணர்ச்சிகளில் சிக்கித் தவிக்கிறோம். இத்தகைய நேரங்களில், எளிமையான, ஆனால் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் மேற்கோள்கள் புத்துணர்ச்சியூட்டும் தெளிவைத் தரும். உலகெங்கிலும் புகழ்பெற்ற சிந்தனையாளர்களும் தத்துவஞானிகளும் உதிக்கும் 'உண்மை மேற்கோள்கள்' , வாழ்க்கையின் யதார்த்தங்களை ஒப்புக்கொள்ளவும், நேர்மையையும் நம்பிக்கையையும் தழுவவும் உதவுகின்றன.
ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட உண்மை மேற்கோள் சில வார்த்தைகளில் ஆழமான ஞானத்தைக் கொண்டுள்ளது. அவை நம் உள்ளுணர்வைத் தட்டி எழுப்பி சுயபரிசோதனைக்குத் தூண்டுகின்றன. பல பிரபலமான தமிழ் கவிதைகளும் பழமொழிகளும் கூட சக்திவாய்ந்த உண்மை மேற்கோள்களே. எடுத்துக்காட்டாக, "உண்மை உரைத்திடின் உலகம் பகையாகும்" என்ற வரியை எடுத்துக் கொள்வோம். இது, உலகம் எப்போதும் உண்மையை ஏற்றுக்கொள்ளாது என்ற கடினமான, ஆனால் ஆழமான யதார்த்தத்தை எடுத்துரைக்கிறது.
ஒரு உண்மை மேற்கோள் பெரும்பாலும் நமக்குத் தேவையான உத்வேகத்தைத் தரக்கூடியது. தடைகளை உடைத்து, இலக்குகளை அடைவதில் உறுதியாக இருக்க இது நம்மை ஊக்குவிக்கிறது. உதாரணமாக "தோல்வியே வெற்றிக்கு முதல் படி" என்ற பழமொழி சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து முயற்சிக்க நம்மை உந்துகிறது.
இதோ உண்மை பற்றிய சில மேற்கோள்கள் உங்களுக்காக:
- வேடம் தரிக்காத உண்மையான அன்பு தான், இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்குமான சிறந்த மருந்து.
- சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட, சோகங்களை பகிர்ந்து கொள்ளும் நட்பின் அன்பு உண்மையானது, வலிமையானதும் கூட.
- அருகில் இருப்பதனால் 'அன்பு' அதிகரித்துவிடுவதும் இல்லை. தொலைவில் இருப்பதால் 'அன்பு' குறைந்து போவதுமில்லை
- உண்மை ஒரு போதும் ஆபத்தானது அல்ல. அது நல்லதையே செய்யும். நல்வழியையே காட்டும்.
- பொய்க்கூறி செழிப்பாக வாழ்வதைக் காட்டிலும் உண்மைக்காக உயிரையே கொடுக்கலாம்.
- நீங்கள் வேண்டுமானால் மற்றவர்களை சில மணிநேரம் முட்டாளாக்கலாம். ஆனால் அவர்களை எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது. அப்போது உங்கள் நாடகம் வெட்டவெளிச்சமாகும்.
- நீங்களே நேர்மையாக திறந்த மனதுடன் இல்லாவிட்டால் வேறு யாருடனும் நீங்கள் உண்மையாக நேர்மையாக இருக்க முடியுமா?
- உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதீர்கள்.
- உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால், அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம். யாருக்கும் தலை குனியவேண்டிய அவசியம் இருக்காது.
- உங்கள் கண்கள் காணாதவற்றிற்காக உங்கள் காதுகளை நம்ப வேண்டாம். அதும் ஆபத்தாக முடியலாம்.
- உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது அடுத்தவர்களுக்காக இல்லை. நமது வாழ்க்கையில் நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்துவதற்காக.
- நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது. ஆமாம். ஏனெனில் உண்மையானவனுக்கு ஏமாற்றத் தெரியாது.
- உள்ளத்தில் நம்பிக்கையும் உண்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதை நேரானதாகவே இருக்கும். பாதைமாறி பயணிக்க விடாது.
- பணத்திற்காக உண்மையை விற்ற அற்ப நபரின் மனம், ஒரு போதும் அமைதியாக இருக்காது. அடுத்த கெட்டதை நோக்கி மனம் ஓடும். ஒருநாள் ஒரு ஆழ்குழிக்குள் வீழும்.
- உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும் என்றும் நிரந்தரம் இல்லை. இதுதான் வாழ்க்கையின் அனுபவப்பாடம்.
- ஒரு உண்மையான நல்ல மனிதன் எதிரியைக் கூட வெறுக்க மாட்டான். அவனுக்கு நடிக்கத் தெரியாது.
- நாம் உண்மையின் பாதையில் நடக்க வேண்டும். ஏனென்றால் உண்மை தான் இறுதியில் வெல்லும்.
- உண்மைக்கு ஒத்திகை தேவையில்லை. நடிப்பதற்கு மட்டுமே ஒத்திகை வேண்டும்.
- கஷ்ட காலங்களில் தான் நாம் உண்மையான உறவுகளைக் காண்கிறோம். கைகொடுக்க ஓடிவரும் உறவுகளை அடையாளம் கண்டுவிடலாம்.
- மிகவும் ஆபத்தான பொய்கள் என்பது உண்மைகளை சிதைத்து உருவாக்குவது. அது கொலையினும் கொடூரமானது.
- குழந்தைகளும் முட்டாள்களும் உண்மையாக பேசுகிறார்கள். குழந்தைகள் அறியாது பேசுகிறார்கள். முட்டாள்கள் அறியாமையில் பேசுகிறார்கள்.
- நேர்மையும் உண்மையும் விலை உயர்ந்த பரிசு. எல்லா மனிதர்களிடமிருந்து அதை எதிர்பார்க்க வேண்டாம். உயர்ந்தவர்களின் அணிகலனாக இருக்கும்.
- நீங்கள் எதையாவது உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய விரும்பினால், அதை எப்போதும் நீங்களே தனியாக செய்து கொள்ளுங்கள். பிறரை நம்பினால் உண்மையும் நேர்மையும் காணாமல் போகலாம்.
- தவறு செய்யும் மனிதர்களை பார்த்து தவறாக பேசாதீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை.
- உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாக இருப்பதில்லை. அழகான வார்த்தைகள் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை.
- உண்மை சில நேரங்களில் வலிக்கவைக்கும். ஆனால் இறுதி வரை வாழ வைக்கும். பொய் எல்லா நேரமும் மனிதனைக் கொல்லும் கூர்மையான ஆயுதம்.
உன்னை வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். ஆனால், நீ எப்போதும் உண்மையாக இரு. காலம்வரும் அதை உணர.
அன்பும் ஒரு நாள் தோற்றுப் போகும், உண்மை இல்லாதவரை நீ நேசித்தால். அன்பு கூட உண்மை இல்லாத அம்பினால் குத்துண்டு சாகும்.
பொய்யான உறவுகளுக்கு முன் புன்னகையும் ஒரு பொய் தான். உண்மையான உறவுகளுக்கு முன் கோபம் கூட புன்னகை தான்.
எனக்கு என் வாழ்க்கையில் நான் கஷ்டப்படாமல் கிடைத்த ஒரு பொக்கிஷம் கஷ்டம் மட்டும் தான். அந்த பொக்கிஷமே வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுத்தந்த நூல்.
ஆணின் அன்பில் மென்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் உண்மை இருக்கும். மென்மையான பெண் என்பதால் அன்பில் மென்மையை எதிர்பார்ப்பது தவறாகிவிடும்.
நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள். வெறுத்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள்.
உனக்குப் பிடித்தவரிடம் அன்பாக இரு. உன்னைப் பிடித்தவர்களிடம் எப்போதும் உண்மையாக இரு.
உண்மையான உழைப்பிற்கு ஊதியம் உண்டு. உண்மையான அன்பிற்கு அர்த்தமும் உண்டு. உண்மையான காதலுக்கு கனவுகள் உண்டு. உண்மையான வாழ்க்கைக்கு உயர்வு உண்டு.
மனதில் அன்பு இருந்தாலே போதும், எதுவும் சாத்தியமே. கடினமான இதயம் கூட கரையும். அன்பை மழையாய் பொழியும் போது.
ஒருவரிடம் பேசவேக் கூடாது. என்று முடிவு செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேசத் தூண்டும் உணர்வே உண்மையான அன்புக்கான அடையாளம்.
சேர்ந்து நின்றால் ஒற்றுமை வளரும். துணிந்து நின்றால் வலிமை வளரும். அன்பை பகிர்ந்தால் உறவுகள் வளரும். வலிகளை மறந்தால் ஆனந்தம் மலரும்.
அன்பானவர்களுக்காக இறங்கிப்போவதில் தவறில்லை. நம் அன்பு புரியாதவர்களிடம் இருந்து விலகிப் போவதும் தவறில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu