திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
திமுக தலைமையகம்-அறிவாலயம் (கோப்பு படம்)
என்ன திடீரென திமுக எம்எல்ஏக்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று விசாரித்தால், ``தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த ஓரிரு வாரங்களில் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகியிருக்கிறது கோட்டை வட்டாரம்.
அதையொட்டி, ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அத்தனை பேருக்கும் அறிவாலயத்திலிருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், ‘உங்கள் தொகுதியில் முக்கியமான கோரிக்கைகள், பிரச்னைகள் உள்ளிட்டவற்றைத் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
முக்கிய நிகழ்ச்சிகள் ஏதேனும் இருந்தால், இந்த இடைப்பட்ட காலத்திலேயே நடத்தி முடித்து விட வேண்டும். சட்டமன்றம் நடக்கும் நாள்களில் யாரும், எந்தக் காரணத்தைச் சொல்லியும் விடுப்பு எடுக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டிருக்கிறதாம். அதேபோல எம்.எல்.ஏ-க்கள் தரப்பிலிருந்து வரும் கோரிக்கைகள்மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையோடு வரச் சொல்லி அமைச்சர்களுக்கும் உத்தரவு பறந்திருக்கிறதாம்.
இதனால் தான், எல்லா எம்.எல்.ஏ-க்களும் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம். அதேபோல் தேர்தல் முடிவுக்கு பின்னர், அமைச்சரவை, ஆட்சி நி்ர்வாகம் உள்ளிட்ட பல விஷயங்களில் புதிய நடவடிக்கைகளை எடுக்க ஆட்சித்தலைமை முடிவு செய்துள்ளதாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu