/* */

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கோகோ போட்டி, மண்டல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு செய்திகள்
X

கோகோ போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், 

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோர் கோகோ போட்டியில் பனை ஓலைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தொகுதி பெற்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வெற்றிக்கு உழைத்த உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர் , ஜான் ரூபன் ஓவிய ஆசிரியர் குமரேசன் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் கோடீஸ்வரன் , உதவி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மேலும் மாணவர்களை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

கிரிக்கெட் போட்டி

வேலூர் மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி துணைத் தலைவர் குமரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் பொன் முத்து போட்டிகளை தொடங்கி வைத்தார் .

இந்த போட்டிகளில் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 அணிகள் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரி, தர்மபுரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியும் விளையாடினர். இதில் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

தர்மபுரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

போட்டிகளில் வென்ற அணிகளுக்கு திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் பொன் முத்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் கல்லூரி முதல்வர் ஞானசுந்தர்,. உடற்கல்வி இயக்குனர் சௌந்தர்ராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற செய்யாறு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கைப்பந்து விளையாட்டு போட்டியில் சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளிலும் ஹாக்கி போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை, மேலாண்மை குழு தலைவர் தேவி, மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி , தணிகவேலு, சுமதி, ராஜ்மோகன் ஆகியோரையும் பாராட்டி மாணவிகளை வாழ்த்தினார்.

Updated On: 23 Oct 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்