/* */

திருவண்ணாமலை: சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால் சாலை மறியல்
X

கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று நல்லவன்பாளையம் ஊராட்சியில் சில பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தண்டராம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டம் 1½ மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை. இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து கொடுக்கவில்லை. வரவு- செலவு கணக்கு முறையாக வழங்கவில்லை என்று கூறினர்.

அடிப்படை வசதிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து நல்லவன்பாளையத்தில் மாலை சுமார் 6 மணியளவில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் வேண்டியும், வரவு- செலவு குறித்து விவாதித்தனர். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு பதில் அளித்தனர்.

இதேபோல் கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையை அடுத்த சானானந்தல் பகுதியில் கிராம சபை கூட்டத்திற்கு முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று பழைய சானானந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என்று தண்டோரா போடப்பட்டது. ஆனால் அதில் எங்கு கூட்டம் நடைபெற உள்ளது என்று முறையாக தெரிவிக்கப்படவில்லை.

வழக்கமாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தான் கூட்டம் நடைபெறும். அதனால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காத்திருந்தும் எந்த பயனும் இல்லை என்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, ஊராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட 4 இடங்களில் எங்கு வேண்டும் என்றாலும் கூட்டம் நடத்தலாம். இதுகுறித்து முறையாக தண்டோரா போடப்பட்டு உள்ளது.

அதன்படி கூட்டம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றனர்.

இதற்கிடையில் போராட்டம் குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அல்லது அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளியுங்கள் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 2 May 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு