/* */

தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஆட்சியர் அழைப்பு

தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தனியார் அரவை ஆலைகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஆட்சியர் அழைப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் கண்டு, முதல் ரக அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை முகவர்கள் மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்து உள்ளது.

எனவே இதில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மண்டல மேலாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 25 May 2022 1:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  7. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  9. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?