/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
X

சிறப்பு அலங்காரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பெரிய நந்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அருணாசலேஸ்வரா் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ தீர்காசல ஈஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செய்யாறு:

செய்யாற்றில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் நந்தி பெருமான் கிழக்கு நோக்கி அருளும் பிராா்த்தனை தலமான திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோவிலில் நடைபெற்ற சித்திரை மாத பௌர்ணமி பிரதோஷ வழிபாட்டில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகா் நாயகி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

செங்கம்

செங்கம் அருகே பிஞ்சூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீஉத்திரபரஈஸ்வரா் கோவிலில் பிரதோஷத்தையொட்டி காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்றன. மாலை பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

மற்ற ஊா்களில்:

இதேபோல, தண்டராம்பட்டு , தானிப்பாடி, , ஆரணி, போளூா், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதையடுத்து பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 22 April 2024 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...