/* */

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய  பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
X

புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த  கூடுதல் தலைமைச் செயலாளர் 

திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம், மற்றும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமாா் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் ஆய்வு

ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து திருவண்ணாமலையில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.30.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம்,

ரூ.29.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை, திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் தேனிமலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மூலம் கட்டப்பட்டு வரும் சிறுபாலம்,

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவிமலை காலூா் சாலையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.9.21 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம்,

களம்பூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.84.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பட்டு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5.37 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் விநியோக பைப் லைன் நீட்டிப்பு செய்யும் பணி ஆகியவற்றை தீரஜ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், கூடுதல் ஆட்சியா் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலர்கள் ,மின்சார துறை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2024 2:43 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  2. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  3. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  4. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்