மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
X

மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் கடையடைப்பு போராட்டம் நடத்திய வியாபாரிகள்.

மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் ஊர் மக்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம்.

மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் இருந்தவர்கள் அந்த வழியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். மேலும் அந்த நபர் தாக்கியதை தட்டி கேட்ட அருகில் உள்ள கடை உரிமையாளரை அந்த கும்பல் தாக்கியதோடு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சென்றுள்ளனர்.

ஏற்கனவே இதே போன்ற கும்பல் பைக்கில் செல்லும் நபர் ஒருவரை அடித்து உதைத்து காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் ஐயப்பன் நகர் பகுதியில் உள்ள தற்போது தாக்குதல் நடத்தக்கூடிய கூடுதலான சிசிடிவி கட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

யானைமலை ஒத்தக்கடை தாக்குதல் சம்பந்தம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கில் மூன்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல்வேறு கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒத்தக்கடை பகுதியில் அதிகளவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இதுபோன்று போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று ஏற்கனவே மூன்று நபர்களை கைது செய்ததன் அடிப்படையில், மேலும், மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மொத்தம் ஆறு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!