/* */

திருவண்ணாமலை பகுதியில் நாளை முதல் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்

திருவண்ணாமலை பகுதியில் நாளை முதல் புதன்கிழமை வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை பகுதியில் நாளை முதல் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
X

திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் மேற்கு, ராஜஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) வரை 3 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் 4-ந் தேதி (திங்கட்கிழமை) நல்லவன்பாளையம், சாவல்பூண்டி, சேரியந்தல், வாணியந்தாங்கல், நொச்சிமலை, கீழ்நாச்சிபட்டு, மலபாம்பாடி, சனர்பாளையம், தண்டராம்பட்டு, டி.கே.பாளையம், கீழ்வணக்கம்பாடி, தானிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ராமஜெயம் நகர், திருவள்ளுவர் நகர், திருக்கோவிலூர் ரோடு, அருணகிரிபுரம், கலர்கொட்டாய், ஆடையூர், புனல்காடு, துரிஞ்சாபுரம், புதூர், ஓட்டேரி, பெரியகோளாபாடி, நல்லவன்பாளையம், அந்தோணியார்புரம், சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டாமுனூர், கலஸ்தம்பாடி, தண்டராம்பட்டு, சின்னையம்பேட்டை, உடையார்குப்பம், ஆத்திபாடி, புதூர் செக்கடி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) சேரியந்தல், வாணியந்தாங்கல், நொச்சிமலை, கீழ்நாச்சிபட்டு, மலப்பாம்பாடி, சனர்பாளையம், அண்ணாநகர், வரகூர், வாணாபுரம், காம்பட்டு, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, நாலாள்பள்ளம், குலமஞ்சனூர், சின்னையம்பேட்டை, உடையார்குப்பம், புளியம்பட்டி, ஆத்திபாடி, புதூர் செக்கடி, கல்நாட்டூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 3 July 2022 2:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது