செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
X

பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளை வாழ்த்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவ, மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவ, மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று அரசு தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 160 அரசு பள்ளிகள், 11 நிதி உதவி பள்ளிகள் இரண்டு சிறப்பு பள்ளிகள் (காது கேளாதோர் கண் பார்வையற்றோர்) 46 தனியார் பள்ளிகள், உள்பட மொத்தம் 219 பள்ளிகளில் இருந்து 6533 மாணவர்கள், மற்றும் 6467 மாணவிகள் என மொத்தம் 13000 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 5270 மாணவர்கள் 5917 மாணவிகள் என மொத்தம் 11, 187 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இது 86.5 தேர்ச்சி சதவீதமாகும்.

செய்யாறு கல்வி மாவட்டத்தை பொருத்தவரை கொழுப்பலூர், புதூர் அள்ளியந்தல் , வயலாமூர் மேல்பாதி தென்பட்டு இளங்காடு ஆகிய அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன அதே போல் சூசை புனித கண் பார்வை அற்றோர் சிறப்பு பள்ளி மற்றும் 24 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளது .

நிதி உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி எதுவும் இல்லை என்று செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.

அரசு மாதிரி பள்ளி மாணவிகள் சாதனை

செய்யாறு கல்வி மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளில் ஐஸ்வர்யா என்ற மாணவி 493 மதிப்பெண்களும், கீர்த்தனா என்ற மாணவி 488 மதிப்பெண்களும், அம்ரீன் என்ற மாணவி 486 மதிப்பெண்ணும் மற்றும் ஜனனி என்ற மாணவி 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களை பிடிக்க மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் வளர்ச்சி குழு நிர்வாகிகள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

Tags

Next Story
ai based healthcare startups in india