மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
போளூரில் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நிழல் பந்தல்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 110 டிகிரி க்கு மேல் வெயில் வதைத்து வருகிறது. மேலும் கத்திரி வெயிலும் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களின் வெப்பத்தை போக்குவதற்கு நெடுஞ்சாலை துறை மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கலசப்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில் கலசப்பாக்கம் முதல் மேலாரணி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணியர் நிழற்குடை எதிரில் மக்கள் வெயிலில் அவதிப்படுகிறார்கள். இப்பொழுது கோடை வெயிலும் கத்திரி வெயிலும் கடந்த 10 தினங்களாக சுமார் 105 டிகிரி வெப்ப நிலையில் வீசுவதால் மக்கள் சாலையில் நடப்பதற்கும் பேருந்துக்காக நிற்பதற்கும் வாகனம் ஓட்டி செல்லும் பொழுது விற்பதற்கும் எந்த ஒரு நிழல் வசதியும் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கலசப்பாக்கம் ,போளூர், திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர் ஆகிய இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் நின்றும் வாகனத்தை நிறுத்தியும் சென்று வருகின்றனர்.
மேலும் பசுமை பந்தல் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் படியும் , மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் பரிந்துரை படியும், கோட்ட பொறியாளர் ராஜ்குமார் அறிவுத்தலின் படியும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது . மேலும் இதுபோல மக்கள் கூடும் பல்வேறு முக்கிய இடங்களில் பசுமை பந்தல் அமைத்து மக்களை காக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலை துறை நிர்வாகத்திற்கும் மக்கள் நன்றி கூறி பசுமை பந்தல் அமைக்க கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu