/* */

வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடிய பணத்தை போலீஸ் மீட்பு

திருவண்ணாமலையில் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் திருடிய பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

HIGHLIGHTS

வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடிய பணத்தை போலீஸ் மீட்பு
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி காசோலையை முகமது சபியுல்லாவிடம் வழங்கினார்.

திருவண்ணாமலை சமுத்திரம் தண்டராம்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபியுல்லா . இவர் மெடிக்கல் டிபார்ட்மென்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி இணையதள லிங்க் ஒன்று வந்துள்ளது. இந்த லிங்கை பயன்படுத்தி அப்டேட் செய்து ஓ.டி.பி. பகிர்ந்து உள்ளார்.

இதையடுத்து அவரது செல்போன் எண் இணைப்பில் இருந்த வங்கிக்கணக்கில் இருந்து .6 லட்சத்து 95 ஆயிரத்து 788 ரூபாயை மர்ம நபர்கள் திருடிவிட்டனர்.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த முகமது ஷபியுல்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பவன்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் சைபர் கிரைம் போலீசார் பாதிக்கப்பட்ட முகமது சபியுல்லா வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 5 ,45,788. ரூபாயை மீட்டு மீண்டும் முகமது சபியுல்லா வங்கிக்கணக்கில் வரவு வைத்தனர்.

அதற்கான காசோலையை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், முகமது சபியுல்லாவிடம் வழங்கினார்.

துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாரதி, தலைமையிலான குழுவினரை மாவட்ட கண்காணிப்பாளர் பவன்குமார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Updated On: 22 May 2022 2:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு