/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

Navaratri Pooja-திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில், துர்க்கை அம்மன் கோயில், ஆஸ்ரமங்களில், நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
X

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சேது கணேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி  நடைபெற்றது.

Navaratri Pooja- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று மாலை 6 மணிக்கு உற்சவா் பராசக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 27) ராஜராஜேஸ்வரியம்மன் அலங்காரத்திலும், புதன்கிழமை (செப்டம்பா் 28) கஜலட்சுமி அலங்காரத்திலும், வியாழக்கிழமை (செப்டம்பா் 29) மனோன்மணி அலங்காரத்திலும், வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) ரிஷப வாகன அலங்காரத்திலும் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். வருகிற 30-ஆம் தேதி மாலை பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். அக்டோபா் 1-ஆம் தேதி ஆண்டாள் அலங்காரத்திலும், 2-ஆம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 3-ஆம் தேதி லிங்கபூஜை அலங்காரத்திலும், 4-ஆம் தேதி மகிஷாசுரமா்தினி அலங்காரத்திலும் உற்சவா் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். அக்டோபா் 4-ஆம் தேதி காலை பராசக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சரஸ்வதி பூஜையும், உண்ணாமலையம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

அதேபோல் திருவண்ணாமலையில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயம், காமாட்சி அம்மன் ஆலயம், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாஸ்ரமம், யோகி ஆசிரமம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது.

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சேது கணேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. இதனையொட்டி வருகிற 5-ந் தேதி வரை தினமும் காலை மாலை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதனையொட்டி உற்சவ அம்மன் மகாமண்டத்தில் எழுந்தருள செய்து கொலு வைக்கப்பட்டுள்ளது.. முதல் நாளான நேற்று பார்வதி அலங்காரம் செய்து லலிதா சகஸ்ரநாமத்துடன் லட்சார்ச்சனை, குங்கும அர்ச்சனை நடைபெற்றது.

இந்த லட்சார்ச்சனை பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ரூ.150 செலுத்தி கலந்து கொள்ளலாம். பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் லட்சார்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Sep 2022 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்